முசுகுந்த நாடு

முசுகுந்த நாடு:(கி.மு.876 முன்)

 தற்சமயம் திருவாரூர் என அழைக்கப்படும் ஆரூரை ஆண்டு வந்த முசுகுந்த சோழ சக்ரவர்த்தியால் அமைக்கப் பெற்றதே முசுகுந்த நாடு. பசுமை வளம் வாய்ந்த 32 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. முசிறியை தலைமை இடமாகக் கொண்டுள்ளது.
முசுகுந்த நாடு என அழைக்கப் பெறுவதற்கு வரலாற்று கூற்று உண்டு. முசுகுந்த நாட்டை உருவாக்கிய முசுகுந்த சோழ சக்ரவர்த்தி, ஒரு சிறந்த சிவன் பக்தர். திருவாரூர் அருள்மிகு தியாகராஜ திருக்கோவில் முசுகுந்த சோழனால் உருவாக்கப்பட்டது. இவர் தீராத சரும நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்க்காக பல சிவனாலயங்கள் சென்று வழிப்பட்டு வந்தார். இருந்தும் அவர் நோய் தீரவில்லை. ஒரு நாள் அமைச்சர் மற்றும் நண்பர்களுடன் முசிறி வழியாக உலா சென்றுகொண்டு இருந்தார். அனைவரும் ஓய்வுக்காக முசிறி குளக்கரையில்(அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் குளம்) சிறிது நேரம் அமர்ந்தனர். அச்சமயம் அரசரின் நாய் குளத்தில் நீந்தி விளையாடி கொண்டிருந்தது. அவரது நாய்க்கும் சரும வியாதி இருந்து வந்தது.
மறுநாள் அரசனது நாய்க்கு நோய் குணமடைந்ததைக் கண்டு வியந்தனர். உடன் அரசரும் அக்குளத்தில் குளித்து, சிவனை வணங்கினார். பல வகை வைத்தியத்திற்கு குணமாகாத அவரது சரும நோய், சிவனின் திருவருளால் குணமடைந்ததைக் கண்டு வியந்தார். உடன் அவ்விடத்தில் சிவனுக்கு ஒரு கோவில் அமைத்தார். இதுவே தற்ச்சமயம் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்.இக்கோவில் கி.மு.876 கட்டப்பட்டது தற்பாது புதுபிக்கப்பட்டு கோவில் அழகான தேற்றத்தில் உள்ளது.இக்கோவில் சிவலிங்கம் 32 கிராமங்களையும் வலம்வந்து வைக்கப்பட்டது.இக்கோவில் 5 பிடகையாக பிரிக்கப்பட்டு   சித்திரை மாதம்  திருவிழா நடைபெற்றுவருகிறது..இக்கோவில் பின்புறத்தில் அமைத்துள்ள குளத்தில் மேல கூறியது போல் சரும நோய் உள்ள பக்தர்கள்  அனைவரும் அக்குளத்தில் குளித்து சிவனை வணங்கினால் நோய் குணமடையும் என்று கூற்று.
பின்னர் கோவிலின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்பிற்க்காகவும் கோவிலைச் சுற்றி 32 கிராமங்கள் அமைத்து, அதற்க்கு தேவையான நிலங்களையும் வழங்கினார். அவரது நாட்டு மக்களையும் இங்கு அழைத்து நிரந்திரமாகத் தங்கச் செய்தார். இப்படி உருவாக்கப் பெற்றதே பின்னர் முசுகுந்த நாடு என்று மக்களால் அழைக்கப்பெற்றது.  
முசிறி 32 (தற்சமயம் எண்ணிக்கை 35 ஆக உள்ளது) கிராமங்களில், அதிகபடியான மக்கள் வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு விவசாயம் தான் முக்கியத் தொழில். 'வேளாண்மை' என்ற பெயரிலிருந்து வந்ததே 'வேளாளர்'. வேளாண்மை செய்வதில் தனித் திறமை வாய்ந்தவர்கள். மழை(வெள்ளம்) நீரை னைகள் அமைத்து தடுத்தும், குளங்கள், ஏரிகள் மூலம் சேமித்தும் வேளாண்மை செய்து வந்தனர். இதனால் 'கார்காத்த' வேளாளர் எனவும் அழைக்கப் பெற்றனர். இவர்கள் பிற்காலத்தில் 'பிள்ளை' என்று அழைக்கப் பெற்றனர். இன்று வீரகோடி வேளாளர், சோழி வேளாளர், இசை வேளாளர்,கொங்கு வேளாளர், பாண்டிய வேளாளர், நாஞ்சில் வேளாளர், நன்குடி வேளாளர், முதலியார், சைவ பிள்ளைமார், கௌண்டர் என்ற பிரிவுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் குளத்திற்குள் பெண் எடுத்து, பெண் கொடுத்து திருமணங்கள் செய்து கொள்வர். பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்வர்.
இவர்கள் தவிர கள்ளர், வண்ணார், பிராமணர்கள், செட்டியார், கொயவர், அம்பலக்காரர், ஆதிதிரவிடர் போன்ற சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் ஒரே கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். பலதரப்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வந்தாலும், அனைவரும் உறவினர்கள் நண்பர்களாய் ஒற்றுமையுடன் எந்தவித பாகுபாடின்றி ஒருதரப்பட்ட மக்களாய் வாழ்ந்து வருகின்றனர்.


முசுகுந்த உறவுகள்  (Musugundhan Relations)

நமது உறவினர் கிராமங்களின் பெயர்கள். முசிறி 32 கிராமங்கள் என்பது பழைய எண்ணிக்கையின் திரட்டு. தற்போது பிற்சேர்க்கையில் அது 36 ஆகவும் 40 ஆகவும் 42 ஆகவும் உயர்ந்ததாக கூற்று. இன்னும் சரி வர அனைத்து தகவல்களும் கிடைக்கப்பெறவில்லையாதலால் இங்கு பழைய கிராமங்களின் பெயர்கள் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளன
ஆத்திக்கோட்டை -Aathikkottai 
ஆலடிக்குமுளை -Aladikkumulai
ஆலத்தூர்  - Aalathur
ஏனாதி – Enathi
 கருப்பூர் - Karuppur
காசாங்காடு - Kaasangadu
கீரத்தூர் - Keerathur
கீழக்குறிச்சி – Keelakkurichi
சிலம்பவேளாங்காடு - Silambavelankaadu
சுந்தம்பட்டி - Sunthampatti
சூரங்காடு - Soorangadu
சூரப்பள்ளம் - Soorappallam
செங்கபடுத்தான்காடு - Sengapaduthaangadu
செண்டாங்காடு – Sendaangadu
செம்பாளூர் - Sembaaloor
செவந்தன்பட்டி - Sevandhan patti
தாமரங்கோட்டை - Thaamarankottai
திட்டக்குடி - Thittakudi

நாட்டுச்சாலை - Nattuchalai
பட்டிக்காடு – Pattikkadu
பள்ளத்தூர் – Pallathur
பழைய மதுக்கூர் - Palaya Madukkur
பாளமுத்தி – Palamuthi
புதுக்கோட்டை உள்ளூர் - Pdukkottai Ulur
புலவஞ்சி – Pulavanchi
மட்டங்கால் - Mattangaal
மன்னங்காடு - Mannangaduமூத்தாக்குறிச்சி - Mooththakurichi
வாட்டாகுடி - Vaattakdui
விக்ரமம் - விக்கிரமம்
முசிறி  கைலதநாதர்  சிவன் திருகோவில்

முசிறி  கைலதநாதர்  சிவன் திருகோவில்


முசிறி  கைலதநாதர்  சிவன் திருகோவில்


முசிறி  கைலதநாதர்  சிவன் திருகோவில்(சனிபகவான்)

கைலதநாதர்  சிவன் திருகோவில் குளம்

கைலதநாதர்  சிவன் திருகோவில் உட்புறம்

கைலதநாதர்  சிவன் திருகோவில் நந்தி பகவான்

கைலதநாதர்  சிவன் திருகோவில் விநாயகர் கோவில்

கைலதநாதர்  சிவன் திருகோவில்  முருகன் கோவில்

கைலதநாதர்  சிவன் திருகோவில் கோபுரம்

கைலதநாதர்  சிவன் திருகோவில் நவகிரகங்கள்

கைலதநாதர்  சிவன் திருகோவில்